மகிழ்ச்சி…இனி இவர்களுக்கான உதவித் தொகை ரூ.1 லட்சம் – ரூ.12 லட்சமாக உயர்வு – தமிழக அரசு அரசாணை!

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டு வரும் தீருதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளுள் விதி எண்.110-இன்கீழ், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு,85,000 ரூபாயிலிருந்து 8,25,000 ரூபாய் வரை தற்போது வழங்கப்பட்டு வரும் தீருதவித் தொகை, இனி பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயாகவும், அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்னதாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்,வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச தொகையான ரூ.85,000-ஐ ஒரு இலட்சமாகவும், அதிகபட்ச தொகையான ரூ.8,25,000-ஐ ரூ.12 இலட்சமாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.