ஈரோடு கிழக்கில் ரூ.4,000 விநியோகம் – அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4,000 விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில்  அதிமுக சார்பில் இன்பத்துரை புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து  வருகின்றனர்.

பணம் விநியோகம் 

இந்த நிலையில், தற்போது மதியம் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4,000 விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில்  அதிமுக சார்பில் இன்பத்துரை புகார் அளித்துள்ளார்.

அன்னை சத்யா நகரில் வீடு வீடாக சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனின் உதவியாளர் பணம் விநியோகம் செய்வதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசாரிடம் பல புகார்கள் அளித்துள்ள நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment