தினக்கூலி மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3,000- கேரள முதல்வர் அறிவிப்பு..!

கேரளாவில் உள்ள 1,59,481 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் தினக்கூலியை இழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3,000 வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 1.60 லட்சம் மீனவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் “அக்டோபர் மற்றும் நவம்பரில் கனமழையால் அதிக எண்ணிக்கையிலான வேலை நாட்கள் இழந்ததால், கேரளாவில் உள்ள 1,59,481 மீனவர் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 3000 ரூபாய் வழங்கப்படும். இந்த நிவாரண நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.47.84 கோடி ஒதுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், தொடர் மழையால் வீடுகள் இடிந்து விழுந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு பருவமழையிலும் கனமழை பெய்து வருகிறது.

 

author avatar
murugan