அரசு பேருந்தில் அனாதையாக கிடந்த ரூ.3.47 கோடி!

அரசு பேருந்தில் அனாதையாக கிடந்த ரூ.3.47 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில்  ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

அதேபோல்  தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தகவல் தெரிவித்தது.

துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை.தேர்தலில் சமயத்தில் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் பறக்கும் படையினரும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் சோதனை மேற்கொண்டு ஆவணமில்லாத  பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றது.

Image result for பேருந்தில்  கிடந்த ரூ.3.47 கோடி

 

இந்த வகையில்  நேற்று மாலை தருமபுரி மாவட்டம்  அருகே பறக்கும் படையினர்  சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனையை மேற்கொண்டனர் பறக்கும் படையினர்.சோதனையின்போது அந்த பேருந்தில் உள்ள  இருக்கைகளுக்கு கீழே  7 பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த பைகளில்  கட்டுக்கட்டாக பணம்  இருந்தது.பின்னர் யாருடை பை என்பது தெரியாத காரணத்தால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அதிகாரிகள்  பணத்தை  எண்ணிப்பார்த்த போது, அதில் ரூ.3.47 கோடி பணம் இருந்தது.மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment