கர்நாடகாவில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய ரூ.2,250

தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய ரூ.2,250 என நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டுள்ளது கர்நாடகா அரசு .

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது .இதனால் ஊரடங்கு மே 3 ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியுள்ளனர் ,452 பேர் உயிரிழந்துள்ளனர் .

இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது , நேற்று (வெள்ளிக்கிழமை ) மட்டும் 44 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதனை அம்மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது .இதுவரை அங்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர் 88 பேர் குணமடைந்துள்ளனர் .பெங்களூரு நகரத்தில்  அதிக எண்ணிக்கையாக  86 ஆகவும், மைசூருவில் 73 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை 17,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை அம்மாநில அரசு சோதனை செய்துள்ளது.

இதற்கிடையில் அம்மாநில அரசு கொரோனா குறித்து தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்வதற்கான தொகையே நிர்ணயித்துள்ளதாக அரசாணையை வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பது இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனா குறித்து பரிசோதனை செய்துகொள்ள 16  ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் .இதில் 11 அரசாங்கம் மற்றும் 5 தனியார் ஆய்வகங்கள் அடங்கும் . தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய ரூ.2,250 என நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.

author avatar
Castro Murugan