15-ம் தேதி முதல் ரூ.2000 வழங்கப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி..!

15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூபாய் 2000 வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடனே மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர். அதில், ஓன்று கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டர். முதல் தவணையாக ரூ.2,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதமே வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 2000 வழங்கும் பணியை கூட்டுறவுத்துறை சிறப்பாக செய்து முடிக்கும்.

நியாயவிலைக்கடைகளில் ஒரு நாளைக்கு 200 பேருக்கு ரூ.2000 நிவாரண தொகை வழங்கப்படும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசமி தெரிவித்துள்ளார்.

 

author avatar
murugan