37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

RRvsRCB: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு..!

ஐபிஎல் தொடரில் இன்றைய RR vs RCB போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு.

16-வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளதால் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் பிளேஆப் சுற்றுக்கு செல்வதற்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நிலையில் , 12 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் முழு முனைப்போடு விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த போட்டியில் பொறுப்பாக விளையாடி வெற்றி பெற போராடும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(w/c), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்):

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (C), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (W), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்