சென்னையில் ரவுடித்தனத்துக்கு அனுமதியில்லை; கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை.!

சென்னையில் ரவுடித்தனத்துக்கு அனுமதியில்லை என்றும் கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் கஞ்சா விற்றாலோ, ரவுடியிசம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார், கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க நேற்று முயன்றனர். அப்போது, காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஆய்வாளர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை அயனாவரம் என்கவுன்ட்டர் குறித்து காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. அவர் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்றும் என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்