33.5 C
Chennai
Monday, May 10, 2021

நேற்றைய போட்டியில் கெயில் சாதனையை முறியடிக்க தவறிய ரோஹித்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 24 ரன்கள் அடித்தார்.அதில் 2 சிக்ஸர் அடங்கும்.

இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இப்போட்டிக்கு முன் ரோஹித் ஷர்மா 102 சிக்ஸர் அடித்து இருந்தார்.நேற்றைய போட்டியில் 2 சிக்ஸர் அடித்ததன் மூலம் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் கிறிஸ் கெயில் சிஸேரை சமன் செய்து விடுவார்.

தற்போது முதல் இடத்தில் கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடனும் , இரண்டாவது இடத்தில் ரோஹித் ஷர்மா 104 சிக்ஸர்களுடனும்  ,  நியூஸிலாந்து அணியின் மார்டின் குப்தில் 103 சிக்ஸர்களுடனும் 3 வது இடத்தில் உள்ளனர்.

Latest news

Related news