சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய்.!

சிங்கப்பூரில்  பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய் ஈடுபட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஊரடங்கை வரும் ஜூன் 1-ம் தேதி வரை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் 23,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் “பாஸ்டன் டைனமிக்ஸ்” நிறுவனம் உருவாக்கிய ரோபோ நாய், சிங்கப்பூர் நகரின் பிஷான் அங் மோ கியோ பூங்காவிற்கு  வருவோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் “விலகி இருங்கள், சமூக இடைவெளி கடைப்பிடியுங்கள்” என்னும் விழிப்புணர்வு ஒலியை தொடர்ந்து ஒலித்து கொண்டு இருக்கும்.

ஒரு பராமரிப்பாளர் உதவியுடன் ரோபோ நாய் பூங்காவை சுற்றி  வருகிறது.இந்த ரோபோ நாயின் உடலில் கேமரா மற்றும் விவரங்களை ஆய்வு செய்யும் சாதனங்களும் உள்ளன. இந்த ரோபோ நாயை பரிசோதனை அடிப்படையில் 2 வாரங்கள் பயன்படுத்தி பார்க்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

author avatar
Dinasuvadu desk