பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது – அமைச்சர் மூர்த்தி

பதிவுத்துறை வருவாய் கடந்த ஆண்டை விட இந்தாண்டு இதே நாளில் ரூ.2,325 கோடி அதிகம் என அமைச்சர் மூர்த்தி தகவல்.

பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் எட்டப்பட்ட ரூ.5,757 கோடியை விட ரூ.2,325 கோடி அதிகமாகும். பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையால் ஆவணங்கள் பதிவு அதிகரித்து அரசுக்கு வரு வருவாய் அதிகரித்துள்ளது. போலி ஆவண பதிவுகளை பதிவுத்துறையே ரத்து செய்யும் நடைமுறையை செப்.28-ல் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment