நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.79% ஆக அதிகரிப்பு – மத்திய அரசு

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை.

நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் 4.21% ஆக இருந்த சில்லறை பணவீக்கம் 2022 ஏப்ரலில் 7.79% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம், 0.84% உயர்ந்து, தற்போது 7.79% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை என்றும் தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசியே, பணவீக்க விகிதம் அதிகரிப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.