தமிழ்நாட்டில் குடியரசு தினம் கொண்டாடும் விதம் எப்படி ?

இந்திய  குடியரசு தின விழாவானது தமிழகத்தில்  கொண்டாடப்படும் விதமானது  தமிழகத்தில் தமிழக ஆளுநர் கொடியேற்றுவார்.பின்னர் அவர் கொடியேற்றியவுடன் முப்படை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்பார்.

குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கமான ஒன்றாகும்.
Related image
அதற்கேற்ப குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சிக்காக மெரினா முழு வீச்சில் தயாராகும்.இந்த விழாவில் முப்படையினரின் அணிவகுப்பு நடைபெறும்.இந்த அணிவகுப்பை மாநில ஆளுநர் மரியாதை ஏற்பார்.இந்த விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெறும். இதில் அனைத்து கட்சியினறும் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.
ஆளுநர் கொடியேற்றியவுடன்  பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்குவார்கள்.குறிப்பாக  வீரதீர விருது,கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது , வேளாண்துறை சிறப்பு விருது,  காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும். அதையடுத்து மாணவ, மாணவியரின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ……

Leave a Comment