4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டு அகற்றம்..!

சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்து குண்டு அகற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

இதனையடுத்து சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது,  புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குண்டு பாய்ந்து காயமடைந்த விவகாரம் குறித்து கீரனூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுவனின் உறவினர்கள் அளித்த புகாரின்  பேரில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, வெடிப்பொருட்களை கவனக்குறைவாக கையாளுதல், காயம் ஏற்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்து குண்டு அகற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சிறுவனை 24 மணி நேரம் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.