திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றம்… காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்; முதல்வர் ஸ்டாலின்.!

கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் ட்வீட்.

கடந்த மே 10இல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றும், வெற்றி பெற்றும் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் தனது ட்வீட்டில், கர்நாடக மக்கள் பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி பதவிநீக்கம், நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தையும் கருத்தில் கொண்டு அவர்கள் வாக்களித்துள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாரதிய ஜனதா கட்சி அகற்றப்பட்டுள்ளது, 2024 பொதுத்தேர்தலிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வெல்வோம் என பதிவிட்டுள்ளார்.

author avatar
Muthu Kumar