கர்நாடகாவில் முதலாளிகளை ஏழை மக்கள் தோற்கடித்துள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேட்டி.
பாஜக கோட்டையாக இருந்த கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த சமயத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு அதிகமாக 68 இடங்களில் வெற்றி பெற்று, 68 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 30 இடங்களில் வெற்றி பெற்று 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தேர்தல் ஆணையம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரேசின் மாபெரும் வெற்றியை கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடக தேர்தலில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
கர்நாடக கட்சி என்றும் துணை நிற்கும். கர்நாடக தேர்தலை அன்பால் வென்றுள்ளோம். கர்நாடக தேர்தல் வெற்றிக்காக உழைத்த அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.