ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 7 முதல் மத வழிபாட்டுத் தளங்கள் மீண்டும் திறப்பு.!

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் -7 முதல் மத வழிபாட்டுத் தளங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது.

முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையில் மாநிலத்தின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது பக்தர்களுக்காக மூடப்பட்ட மத வழிபாட்டுத் தளங்கள் செப்டம்பர்-7 முதல் பொது மக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை நேற்று வெளியானது.

மேலும், கொரோனாக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று அரசாங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.