ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தர வேண்டும் – ஈபிஎஸ்

தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கெடுக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தர வேண்டும். பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment