+2 மாணவர்களுக்கான அலகு தேர்வு வழிகாட்டு முறை வெளியீடு…!

வாட்ஸ்அப் மூலம் அலகு தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது செய்முறை தேர்வுகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்படி நடத்துவது குறித்து சமீபத்தில் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் அதுவரை மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், பொதுத் தேர்விற்கு 12 ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகு தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

  • பிளஸ் டு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த வாட்ஸ்அப் மூலம் அலகு தேர்வு நடத்தப்படும்.
  • வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் குழு அமைக்கவேண்டும்.
  • வாட்ஸ்அப் குழுவில் தேர்வுக்கான வினாத்தாள்களை அனுப்பவேண்டும்.
  • விடைத்தாளில் பெயர், பதிவு எண் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • மாணவர்கள் விடையே தனித்தாளில் எழுதி பெற்றோர் கையெப்பம் பெற்று PDF ஆக அனுப்ப வேண்டும்.
  • ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண் வழங்க வேண்டும்.
  • வாட்ஸ்அப் குழுவில் வேறு செய்திகள், வீடியோக்கள் அனுப்பக் கூடாது.

பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அலகுத்தேர்வு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகளை அரசு வெளியிட திட்டமிட்டுளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan