சென்னையில் 15 மண்டலங்களில் ராயபுரம் தான் முதலிடம்.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,324 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,646 பேரும், திரு.வி.க. நகரில் 1,393 பேரும், தேனாம்பேட்டையில் 1,412 பேரும், தொண்டியார்பேட்டையில் 1,322 பேரும் மற்றும் அண்ணா நகரில் 1089 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்