#RanjiTrophy2022: இரு கட்டங்களாக ரஞ்சி கோப்பை போட்டி – பிசிசிஐ

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி -மார்ச் மாதங்களில் லீக் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருப்பதாக தகவல்.

ரஞ்சிக்கோப்பை 2022 கிரிக்கெட் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதன்படி லீக் போட்டிகள் அனைத்தும் முதல் கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் என்றும் நாக்-அவுட் போட்டிகள் ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டியான 38 அணிகள் பங்குபெறும் ரஞ்சி கோப்பை போட்டிகள் ஜனவரி மாதம் 13 ம் தேதி துவங்குவதாக இருந்தது.

இந்த போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பிப்ரவரி -மார்ச் மாதங்களில் லீக் போட்டிகளை நடத்துவது என்றும் ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த பின் ஜூன் மாதத்தில் நாக்-அவுட் சுற்று போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்