தப்பிக்க நினைத்த ராணா கபூர் – மேலடுக்கு கண்காணிப்பு போட்ட அமலாக்கத்துறை.!

யெஸ் வங்கி முன்னாள் இணை நிறுவுனர் ராணா கபூருக்கு சொந்தமான டெல்லியில் சாணக்கியபுரி உள்ளிட்ட முக்கிய 3 இடங்களில் இருக்கும் ஆடம்பர மாளிகைகள் உட்பட இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு அதிகம் என கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது மனைவி பிந்து கபூரின் பெயரில் உள்ளது. இந்த நிலையில் சொத்துக்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்று தருமாறு ராணா கபூர், கேட்டுக்கொண்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. 

மேலும், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட ராணா கபூர், அவரது சொத்துக்களை விற்ற பணத்துடன் பிரிட்டன், பிரான்ஸ் அல்லது அமெரிக்காவில் செட்டில் ஆக திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை கண்டறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ராணா கபூருக்கு தொடர்புடைய சொத்துக்களின் மீதான கண்காணிப்பை இருமடங்காக அதிகரித்து கண்காணித்து வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்