ஆளுநரே வேலை செய்யாமல் தடுக்கும் பாஜக இதற்கு பதில் சொல்க – ராஜீவ் காந்தி

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த பெண்ணின் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ட்விட். 

தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து பதில்களையும் ஆளுநரிடம் தமிழக அரசு அளித்துள்ளது. ஆனால் ஆளுநர் பதில் அளிக்க தாமதபப்டுத்தி வருகிறார். இதற்கிடையில், ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது.

இந்த நிலையில், இந்த பெண்ணின் மரணம் குறித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் தடை அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத இந்த இடைப்பட்ட காலத்தில் கூட பல பேர் தற்கொலை! தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும். ஆளுநரே வேலை செய்யாமல் தடுக்கும் பாஜக இதற்கு பதில் சொல்க!!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment