ரஜினி ‘1996’ போன்று தாக்கத்தை ஏற்படுத்துவார் – குருமூர்த்தி கணிப்பு ..!

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். இன்னும் 2 நாட்களில் ரஜினி கட்சி துவங்குவதற்க்கான அறிவிப்பை அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இன்று ரஜினி தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை, நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை. தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில், குருமூர்த்தி தனது ட்விட்டரில் ட்வீட் ஓன்று போட்டுள்ளார். அதில், ரஜினி உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவால் தனது முடிவைப் பற்றி என்னிடம் கூறினார். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அரசியலில் நேரடியாக இல்லாமல் தமிழக மக்களுக்குச் சேவை செய்வேன் என்று அவர் கடைசி பாராவில் கூறியுள்ளதை பார்க்கவேண்டும்.


எனது கணிப்பு என்னவென்றால் கடந்த 1996-ம் ஆண்டைப் போல தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அப்போது, திமுகவுடன் தமிழக மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இதனால், ரஜினி வார்த்தையை கேட்டு தமிழக மக்கள் அனைவரும் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர்.

இதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan