காட்டடி அடித்த சேட்டன் சஞ்சு… லக்னோவிற்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்..!

RRvLSG: ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர்.

ஐபில் 17 தொடரின் இன்றைய நாளில் நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும்  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச தேர்வு செய்தனர்.  அதன்படி தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஜோஸ் பட்லர் 11 ரன் எடுத்து வெளியேறினார்.

அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 24 ரன்னில் க்ருணால் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார்.

மறுபுறம் இருந்த ரியான் பராக் அரைசதம் அடிக்காமல் 29 பந்தில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டர் என மொத்தம் 43 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மத்தியில் இறங்கிய ஹெட்மியர் வந்த வேகத்தில் வெறும் 5 ரன் எடுத்து நடையை கட்டினார். ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாகவும், சிறப்பாகவும் விளையாடி 82* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதில் 6 சிக்ஸர் , 3 பவுண்டரி அடங்கும்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர்.  லக்னோ அணியில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டையும், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இன்றைய 2-வது போட்டியில் மும்பை அணியும், குஜராத் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.

author avatar
murugan