மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு – சென்னை மேயர்

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மேயர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் சிறு பாலங்களுக்கு அடியில் உள்ள கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், இதுகுறித்து சென்னை மேயர் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் நடக்கும் இடங்களில் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment