ராகுலின் ஆட்டம் போதாது! கில் சிறப்பாக விளையாடுகிறார்- தினேஷ் கார்த்திக்

டெஸ்ட் போட்டிகளில் ஒப்பனராக கே.எல் ராகுலின் சராசரி போதாது, கில் சிறப்பாக விளையாடி வருவதாக கார்த்திக் கூறியுள்ளார். 

சமீபத்தில் முடிந்த வங்கதேச தொடருக்கான டெஸ்ட் போட்டியிலும் சரி, அதற்கு முந்தைய தொடரிலும் சரி, கே.எல் ராகுல் சுமாராகவே விளையாடி வருகிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 30 களில் தான் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கும் போது இந்த சராசரி போதாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா, பங்குபெற தனது கடைசி டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியாவுடன் அடுத்த ஆண்டு விளையாடுகிறது. ராகுல் தொடர்ந்து சில சதங்களுடன் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கான அணியில் அவரால் தொடர்ந்து நீடிக்க முடியும்.

இல்லையெனில் அவரது இடத்தை பிடிக்க நிறைய வீரர்கள் இருக்கின்றனர், சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வருகிறார். கில், நிரந்தரமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தினேஷ் கார்த்திக் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment