சிறுவனிடம் சொன்ன வாக்கை காப்பாற்றிய ராகுல் காந்தி…! என்ன செய்துள்ளார் தெரியுமா?

ராகுல் காந்தி, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்த நிலையில், அதனை வாங்கி அனுப்பியுள்ளார். 

சமீப காலமாகவே ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிற நிலையில், மக்களுடன் மக்களாய் மிகவும் சகஜமான முறையில் பழகி வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்து இருந்தார். மேலும், அவர் கூறியபடி ஒன்பது நாட்களுக்குப் பின் அச்சிறுவனுக்கு ஸூ ஒன்று வாங்கி அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து சிறுவன் ஆண்டனி பெளிக்ஸ் கூறுகையில், சாலையோரம் நிற்கும் போது தன்னை ராகுல்காந்தி தம்பி வா என்று அழைத்து டீ வாங்கிக் கொடுத்ததாகவும், என்ன படிக்கிறாய், எந்த விளையாட்டில் ஆர்வம் என கேட்டு, ரன்னிங் என்று கூறியதை அடுத்து ஸூ வாங்கி அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி விளையாட்டு பயிற்சியாளர் ஒருவரை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். அவ்வாறு ஏற்பாடு செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும் என்றும்,  நான் சாம்பியன் ஆன பிறகு அவரை சென்று சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.