வறுமையிலுள்ள விநியோகஸ்தர்களுக்கு 15 லட்சம் ராகவா லாரன்ஸ் நிதி உதவி!

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவடைய இருந்த 21 நாள் ஊரடங்கு, தற்பொழுது நீட்டிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு தொழிலாளிகள் சினிமாவில் வேலை செய்யும் பலர் முடக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சினிமா திரை உலகில் வேலை செய்த கோடிக்கணக்கான பெப்சி ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என பெப்சி நிறுவனம் அறிவித்து இருந்தது. அதை கருத்தில் கொண்டு பல நடிகர்கள் தங்களால் முடிந்த கோடிக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான பணத்தை கொடுத்து உதவினர்.
ராகவா லாரன்சும் இதற்காக 3 கோடி ரூபாய் வழங்கினார். அதில் 50 லட்சம் தமிழக முதல்வரின் நீதிக்கும், 50 லட்சம் பிரதமரின் நிதிக்கும், 50 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்கும், 50 லட்சம் இயக்குனர் அமைப்புக்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் 75 லட்சம் நான் பிறந்து வளர்ந்த இடமான ராயபுரம் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கும் என விளக்கத்துடன் வழங்கியிருந்தார்.
அவர்களுக்கு தேவையான உணவுகளையும் அவரும் காவல்துறை உதவியுடன் சிறப்பாக செய்ததாக கூறி இருந்தார். இந்நிலையில் தற்பொழுது இவர் விநியோகஸ்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு அந்த விநியோகஸ்தர் சங்கத்தலைவர் டி ராஜேந்திரன் அவர்களிடம் 15 லட்சம் ரூபாயை நன்கொடையாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார்.

author avatar
Rebekal