உலகளவில் 21 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.! 1.3 லட்சத்தை கடந்தது பலி.!

உலகளவில் கொரோனா பாதிப்பு 21 லட்சத்தை கடந்து, 1,36,048 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகளவில் கொரோனவால் இதுவரை 21,00,667 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,36,048 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,23,932 பேர் குணமடைந்துள்ளார்கள் என்று உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதலில் சீனாவில் கொன்று குவித்த கொரோனா வைரஸ், பின்னர் இத்தாலியை புரட்டிப்போட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வந்தனர். தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி உயிர்களை கொத்துக்கொத்தாக கொன்று வருகிறது. பாதிப்பும் மற்றும் உயிரிழப்பில் உலகளவில் அமெரிக்காவில் தான் அதிகம். இதுவரை அமெரிக்காவில் 6,44,417 பேர் பாதிக்கப்பட்டு, 28,559 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் விளைவு காரணமாக பிற நாடுகளுக்கு செல்லவிருந்த மருத்துவ உபகரணங்களை தனது நாட்டிற்கு நூதன முறையில் திருப்பி வருகிறார் அதிபர் ட்ரம்ப். மேலும் அங்கு வழங்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் காசோலையில் தனது பெயரை பொறிக்க வேண்டும் என்று ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.