ஆஸ்திரேலிய ஓப்பன்- ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..!

ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதியில் ரஃபேல் நடால் மடியோ பெரடினியை வீழ்த்தி  இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதியில் ரஃபேல் நடால் இத்தாலியின் பெரட்டினியை வீழ்த்தி 6-வது முறையாக ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

பெரிட்டினிக்கு எதிரான அரையிறுதியில் நான்கு செட்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-3, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.இரண்டாவது அரையிறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை எதிர்கொள்கிறார்.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால் தற்போது 21-வது பட்டத்தை வெல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஃபேல் நடால் வரலாறு சாதனை படைக்க இன்னும் ஒரு வெற்றி மட்டுமே உள்ளது. ரஃபேல் நடால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது நடால், நோவக் ஜோகோவிச் மற்றும் மூத்த வீரர் ரோஜர் பெடரர் ஆகியோர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றுள்ளனர்.

author avatar
murugan