புதுச்சேரி மரங்களில் இருக்கும் இரும்பு வலைகளை அகற்றும் சமூக  பணி துவக்கம்!

புதுச்சேரியில் உள்ள மிஷன் வீதியில் கடந்த 7ஆம் தேதி மரங்களில் இருக்கும் இரும்பு வலைகளை அகற்றும் சமூக  பணியின் துவக்கவிழா நடைபெற்றது.

மரங்களில் இருக்கும் இரும்பு வலைகளை அகற்றும் சமூக  பணியின் துவக்கவிழா புதுச்சேரியில் உள்ள மிஷன் வீதியில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு வனத்துறை துணை இயக்குனர் திரு.குமாரவேல் கலந்துக்கொண்டு மரங்களுக்கு பாதிப்பாக உள்ள இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணியை தொடக்கிவைத்தார்.

இச்சமூக பணியில் புதுச்சேரி அரசு வனத்துறை ஊழியர்கள் ,பாண்டிச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் திரு.வெள்ளையன் மற்றும் துணைத்தலைவர் திரு.பாபு,செயலாளர்  திரு.விஜயபூபதி,மணிமாறன்,சிவா,பத்மநாபன்,மதுரைவேல்,செபஸ்டியன்,அருண் மற்றும் சமூக ஆர்வலர்கள் தனசுந்தாராம்பால்அறகட்டளை நிறுவனர் திரு.பூரனான்குப்பம் அனந்தன்,ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். பயிற்சிவகுப்பு  நிறுவனர்.திரு.வெற்றிசெல்வம்,புதுவை அறிவியல் இயக்கம் செயாலாளர்.திரு.அருண் நாகலிங்கம்,கீப் கிளீன் பாண்டிச்சேரியின் திரு.கந்தகுமரன்,அப்துல்கலாம் அறக்ட்டளை புதுச்சேரி நிறுவனர்.திரு.மணிகண்டன்,சமூகன் அறக்கட்டளை நிறுவனர்.திரு.சமூகன் சரவணன்,புதுச்சேரி வளர்ச்சி கட்சி அமைப்பாளர்.திரு.பாஸ்கரன்,வில்லியனூர் திரு.அசோகன்,அன்ன பிரதோஷனா அறக்கட்டளை துணை நிறுவனர் திரு.திருமுருகன் மற்றும் பலர் இச்சமூக பணியில் ஈடுபட்டனர்.இந்த பணியானது தொடர்ந்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment