வெங்காயம் வேண்டுமா?தேவையான அளவு வாங்கிக்கொள்ளுங்கள் -மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு  அறிவுறுத்தியுள்ளார் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்.

சமீபத்தில் மகாராஷ்ட்ரம், ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைவிடாமல் பெய்த மழையால், வெங்காயம் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதன்காரணமாக, வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் சூழல் உருவானது.

இந்த நிலையில் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், போதுமான வெங்காயம் இருப்பில் உள்ளது திரிபுரா, ஹரியானா, ஆந்திர மாநிலங்கள் கோரிய அளவு ஏற்கனவே வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.மேலும் வெங்காயம் போதிய அளவு இருப்பு உள்ளது .தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.