#Breaking:இனி வீடு தேடி ரேசன் பொருட்கள் வரும்- முதல்வர் அறிவிப்பு!

பஞ்சாப்:இனி மக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவத் மான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து,கடந்த மார்ச் 16 ஆம் தேதி பஞ்சாப் மாநில முதல்வராக பகவத் மான் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில்,பஞ்சாப் மக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும்,குடும்ப அட்டைதாரர்களிடம் நேரம் கேட்டு அதற்கேற்ப பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“பஞ்சாப் மக்களுக்கு வீட்டு வாசலில் ரேஷன் விநியோகத்தை தொடங்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.எங்கள் அதிகாரிகள் உங்களை அழைப்பார்கள்,அதற்கான நேரத்தைக் கேட்பார்கள் & அந்த நேரத்தில் ரேசன் பொருட்களை வழங்குவார்கள்.இது ஒரு விருப்பத் திட்டம்”,என்று கூறியுள்ளார்.