புதுக்கோட்டை கோவில் தேர் விபத்து.! செயல் அலுவலர் பணியிடை நீக்கம்.!

0
23

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்து நடந்த சமயம், பணியில் இருந்த கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் பிரபலமாக இருக்கும் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக சரிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். மேலும், அரிமளம் எனும் ஊரை சேர்ந்த ராஜகுமாரி எனும் 64 வயது மூதாட்டி படுகாயமுற்று அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவர் கடந்த 7-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து நடந்த சமயம், பணியில் இருந்த கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இந்து சமநிலையை துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here