#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி!

#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி!

Default Image

பொதுக்குழு ஒப்புதலின்றி இரு பதவிகள் செல்லாது எனில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலும் செல்லாததாகிவிடுமா? 

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விறுவிறுப்பாக இருதரப்பின் காரசார விவாதங்களுடன் நடைபெற்று வருகிறது. அப்போது, மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்? என்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பது குறித்தும் விளக்க வேண்டும் எனவும் இ.பி.எஸ். தரப்புக்கு கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் செல்லாது என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலும் செல்லாததாகி விடுமா என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பனார். இதற்கு ஈபிஎஸ் தரப்பு கூறுகையில், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து,  ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்ட போதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பின் பேரிலேயே பொதுக்குழு கூட்டப்பட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பு விடுதத்தில் தவறில்லை. 2016-அழ சசிகலா சிறை சென்றதால் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை ஏற்று 2017-ல் பொதுக்குழு கூட்டப்பட்டது. 2017 பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தும் செய்து ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்கு தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளது.

ஜூலை 23 பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டிலும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை. செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நியமனங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது என பொதுக்குழு தொடர்பாக எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் கேள்விக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளித்து வருகிறது.

Join our channel google news Youtube