புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 23ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.