புதுசேரியில் கள்ளத்தனமாக மது விற்பனை.! 100 கடைகளின் உரிமம் ரத்து.! 200 பேர் மீது வழக்குப்பதிவு.!

இன்னும் மதுபான கடைகள் திறக்காத புதுசேரியில், மது கணக்கு குளறுபடியாக இருந்ததாக சுமார் 100 கடைகளின் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட  தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், புதுசேரி அரசு இன்னும் மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. 

 இந்நிலையில் புதுசேரியில் கள்ளத்தனமாக அதிக விலையில் மது விற்கப்படுவதாக புதுசேரி ஆளுநர் கிரண்பேடிக்கு புதுசேரி சட்டமன்ற உறுப்பினர் கட்சி தலைவர் அன்பழகன் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், மதுக்கடைகளில் சோதனை நடைபெற்றது. 

அதில் ஊரடங்கிற்கு முன்னர் மது இருப்பையும், தற்போதைய மது இருப்பையும் கணக்கில் வைத்து, அதில் மது கணக்கு குளறுபடியாக இருந்ததாக சுமார் 100 கடைகளின் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 8 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எஸ்.பி ராகுல் அலுவால் தலைமையில் காலால் துறை வழக்குகளை விசாரிக்கும் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018 ஆண்டு முதல் கணக்கு வழக்குகளை மதுக்கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. 

இதனை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால், புதுசேரியை சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்று வாங்கி மதுவங்கி குடிக்க தொடங்கி விடும் சூழல் ஏற்பட்டுவிடும். இதனால் காரோனா பரவும் அபாயம் ஏற்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அரசிடம் அறிவுறுத்தியுள்ளார். தற்போது புதுசேரி அரசு மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.