இனி கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அளித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதில் குறிப்பாக நீண்ட மாதங்களாக கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தற்போது அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று, நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி என்றும் பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்