#Breaking:அறிவுரைக் கழகத்தில் பப்ஜி மதன் ஆஜர்..!

குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பப்ஜி மதனை தற்போது அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர்.

யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்,குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பப்ஜி மதனை தற்போது அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் உள்ள இந்த அறிவுரைக் கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்பு மதன் ஆஜராகி,அவர்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.அதனை பயன்படுத்தி,குண்டர் சட்டம் செல்லாது,தன்மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது என அவர் தரப்பு வாதிடலாம்.

இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரி ஆஜராகி ,மதன்மீது எதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டது என்பது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பார். இதனையடுத்து,குண்டர் சட்டம் போடப்பட்டது சரியா?,இல்லையா? என்று நீதிபதிகள் உத்தரவிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.