#BREAKING : இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை – நீதிபதி ரமணா

#BREAKING : இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை – நீதிபதி ரமணா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

ஜார்கண்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், நீதிபதிகள் புகார் அளித்தால் காவல்துறையோ, சிபிஐ அமைப்போ உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில், சிபிஐ, உளவுத்துறை அமைப்புகள் நீதித்துறையின் விசாரணைக்கு உதவ மறுப்பதாகவும் குற்றசாட்டியுள்ளார். மேலும், புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube