குடமுழுக்கு நடத்த தடைகோரி வழக்கறிஞர் முறையீடு.!

  • இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் முறையீடு ஒன்றை  தாக்கல் செய்தார்.
  • அதில் தொல்லியல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை எனவே  குடமுழு நடத்த தடை விதிக்கவேண்டும் என அந்த முறையீட்டில் கூறியிருந்தார்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு தமிழில்  நடத்த வேண்டும் என  ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்த வேண்டும்  என மற்றோரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் முறையீடு ஒன்றை  தாக்கல் செய்தார்.அதில் தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல்  நடத்த உள்ளனர்.

புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை எனவே குடமுழு நடத்த தடை விதிக்கவேண்டும் என அந்த முறையீட்டில் கூறியிருந்தார்.பின்னர் நீதிபதி வழக்கறிஞர் சரவணன் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக கூறினார்.

author avatar
murugan