10-ம் வகுப்பு தேர்வுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு .!

 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த  வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்  நேற்று முன்தினம் 10-ம் வகுப்புக்கு  ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தாக்கம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

தமிழகத்தில் இதுவரை 8, 718 பேர் பாதிக்கப்பட்டும், 61 பேர்  இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் வருகிற ஜூன், ஜூலை மாதங்களில்  அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால் கொரோனா வைரஸ் மாணவர்கள் மத்தியில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அமைச்சரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கூறிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழகத்தில் நேற்றுவரை 9,227  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
Dinasuvadu desk