பார்வையற்றவர்களுக்காக ரூபாய் நோட்டுகளை கண்டு பிடிக்க செயலி !

பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தாலும் இன்னமும் பணத்தின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

2018-ம் ஜூன் மாதத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகளை திட்டமிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.இந்தியாவில்  80 லட்சம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்ளனர்.

ரூபாய் நோட்டுகளில் இண்டாகிலியோ  பிரிண்டிங் மூலம் பணத்தின் மதிப்பை காண குறிகள் அச்சடிக்கப்பட்டன.ஆனால் இந்த வசதி எல்லா ரூபாய் நோட்டுகளில் இல்லை எனவே  ரிசர்வ் வங்கி எல்லா ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க மொபைல் செயலி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த செயலி கேமரா  மூலம் பணத்தை  புகைப்படத்தை எடுப்பதன் மூலம் அதன் மதிப்பை தெரியப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.மேலும் அந்த பணத்தின் மதிப்பை ஒலி எழுப்பி கூறவேண்டும்.ரூபாய் நோட்டை சரியாக புகைப்படம் எடுக்கவில்லை என்றாலும் அந்த பணத்தின் மதிப்பை தெரிவிக்க வேண்டும் .இந்த அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு செயலியை உருவாக்க மென்பொருள் நிறுவனகளுக்கு ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்து உள்ளது.

author avatar
murugan