வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு – வேளாண் அமைச்சர்

2022-23-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் 2-வது வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் தாக்கல் செய்தார்.

அப்போது வேளாண் பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு அளிக்கும். வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனிடையே, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த ஆண்டை விட ரூ.231.9 கோடி அதிகம் (2021-22ம் ஆண்டின் திருந்திய மதிப்பீடு – ரூ.32,775.78 கோடி) என்பது குறிப்பிடப்படுகிறது. விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் வகையில் “தமிழ் மண் வளம்” என்ற இணையதளம் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்