சிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடிய கைதிகள்! விபத்தில் சிக்கி 5 பேர் பலி!

லெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.

லெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் 69 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், இதுபற்றி தகவல் அறிந்ததும் காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கினர். காவலர்கள், 8 கைதிகளை  பிடித்தனர். சிலர் காரில் தப்பி ஓடி உள்ளனர்.  அப்போது கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 5 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, கைதிகள் சிறையை உடைத்து கொண்டு தப்பி ஓடியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் லெபனான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை முன்னிட்டு, நெருக்கடியான சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று கைதிகளின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்த நிலையில், அதிக தண்டனை காலம் அனுபவித்த கைதிகளை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment