பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகாரளித்த பெண்ணுக்கு காத்திருந்த பரிசு!

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் அளித்த பெண், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் வசித்து வந்த சந்தோஷ் என்பவர், அவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணுடன் நட்புறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் காதல் மலர, இருவரின் வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால் நிலப்பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, சந்தோஷ் குடும்பத்தினர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.

அதன்பின் தன்னுடைய மகளை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த 2010 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, 95 நாட்கள் சிறையில் இருந்து, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் நடத்தப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து, தன் மீது பொய் புகார் அளித்து சிறையிலடைத்த பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சந்தோஷ் சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பொய் புகார் காரணமாக சிறை சென்றதால், தன்னுடைய படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், வழக்கறிஞருக்கு 2 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும், தனக்கு ஓட்டுனர் உரிமம் மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, தான் பொறியாளராக பணியாற்ற வேண்டிய நிலை இருந்ததாகவும், தற்பொழுது அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பொய்யான பாலியல் புகார் கொடுத்து சந்தோஷின் எதிர்காலத்தை பாழாக்கியதால், சந்தோஷ்க்கு 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment