ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடவுள்ள பிரதமர் ….!

பிரதமர் மோடி அவர்கள் இந்த ஆண்டும் ராஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள்  கடந்த சில ஆண்டுகள் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில், ரஜோரியில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பிரதமர் தீபாவளியைக் கொண்டாடினார்.

இந்நிலையில் இந்த ஆண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

author avatar
Rebekal