#Justnow:இரண்டு நாள் வெளிநாடு பயணம்…புறப்படுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில்,ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை(மே 23) மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் டோக்கியோ செல்கிறார்.ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை (மே 23 ஆம் தேதி) ஜப்பானின் டோக்கியோவுக்கு செல்கிறார்.

இதனைத் தொடர்ந்து,மே 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில்,இந்தியா உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் இந்தோ-பசிபிக்கில் உள்ள சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து,குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பது மட்டுமின்றி,பிரதமர் மோடி அவர்கள்,அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார்.அதன்பின்னர்,ஜப்பானிய வர்த்தக சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.

குவாட் உச்சி மாநாடு என்பது ஆஸ்திரேலியா,இந்தியா,ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மூலோபாய பாதுகாப்பு, ஜனநாயகம்,சர்வதேச சட்டம்,விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு உரையாடலைக் குறிக்கிறது.

Leave a Comment