முதன் முறையாக நாடாளுமன்றம் சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்றார் பிரதமர் மோடி.!

குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக நாடாளுமன்றம் வந்து தனது உரையை ஆற்றுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

நாளை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு , தான் குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நாடாளுமன்றம் வந்துள்ளார்.

குதிரைப்படை புடைசூழ தனது வாகனத்தில் கம்பீரமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடளுமன்றம் வந்திறங்கினார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வாயிலில் நின்று வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பை ஏற்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் சென்றுள்ளார்.

தற்போது தனது முதல் நாடாளுமன்ற உரையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment